இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் மண், கற்கள் மற்றும் இருப்பினாலான பாத்திரங்களில் சமையல் செய்ததும் ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்த இரும்பு பாத்திரங்கள் தற்போது யாரும் பயன்படுத்துவதில்லை.இந்த நவீனமயமான காலத்தில் அனைவரும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் தான் சமைக்கிறார்கள். நான்ஸ்டிக் பாத்திரங்களை விட மிகவும் ஆரோக்கியமான இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் உடலில் தேவையான அளவு மற்றும் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.
உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பது தினசரி உடற்பயிற்சி செய்தாலும் அதற்க்கு பலன் கிடைக்காது.ஆனால் இரும்பு பாத்திரத்தில் சமைத்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்,
இரத்த அளவு குறைவாக இருந்தால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இது மனநல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
கருத்தரிப்பு சிகிச்சை செய்தவர்கள், வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள், நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும். இதை தடுக்க இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுங்கள்.
ஹீமோகுளோபின் அல்லது அளவு சரியாக இருந்தால் முடி உதிர்வது தடுக்க முடியும்.