Categories
தேசிய செய்திகள்

“இரும்பு பாலம் திருட்டு விவகாரம்”…. வசமா சிக்கிய 2 அரசு அதிகாரிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!

பீகாரில் 60 அடி நீளம் உள்ள இரும்பு பாலத்தை  கடந்த சில நாட்களுக்கு முன் சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் 2 அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு வானிலை துறை அதிகாரி) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது “இந்த திருட்டு சம்பவத்தில் வானிலைத்துறை அதிகாரி அரவிந்த் குமார், எரிவாயு கட்டர்கள் மற்றும் மற்ற உபகரணங்களுடன் ஆயுதம் ஏந்திய குழுவை வழிநடத்தி இருக்கிறார். இக்குழுவினர் சில தினங்களுக்கு முன் பாலத்தை அகற்றினர். வெறும் 3 தினங்களில் பாலம் முழுதும் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.
எனினும் அந்த  ஸ்டீல் கட்டமைப்பு பாலம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்ததால், யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அம்மாவட்டத்தின் துணை வட்ட அதிகாரியான ராதே ஷியாம் சிங், இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக இருந்து இருக்கிறார். பின் ராதே ஷியாம் சிங், மேலும் 6 கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு சேனல்கள் மற்றும் பிற பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மற்றும் பிக்-அப் வேன் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |