Categories
மாநில செய்திகள்

இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இனமக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக எதிர்த்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்து இருக்கின்ற வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சேகரிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்காக வீட்டு மனைகளுக்கு இலவசமாக பட்டா போட்டு கொடுப்பதற்கான நடவடிக்கையில் நிர்வாகமும் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.

நீர் ஆதாரத்தையும், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசின் முடிவை சீராய்வு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் மார்ச் 7ஆம் தேதி மனு கொடுத்திருக்கிறேன். களம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை இலவச வீட்டு மனை பட்டா திட்டத்திற்காக நத்தம் நிலம் என மாற்றக்கூடாது என மிட்டா மண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இருளர் இன மக்களுக்காக வேறு இடத்தை கண்டறியவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கார்த்திக் மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில்  இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நான்கு வாரங்களில்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி மிட்டா மண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவர் போன்றோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கின்றனர்.

Categories

Tech |