உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
டென்மார்க் நாட்டில் மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர். இதனையடுத்து உக்ரைன் மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை இருப்பதை வெளிப்படுத்தியவாறு “இருளில் ஒரு வெளிச்சம்” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வரவேற்ற ஜெலன்ஸ்கி “ஐரோப்பாவிற்குள் போர் மூண்டுள்ளது மிருகத்தனமானது” என்று கூறியவாறு டென்மார்க் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.