Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய பிரபல நாடு…. அவதிக்குள்ளான மக்கள்…. மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்….!!

லண்டனில் ஏற்பட்ட மின் தடையால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் லண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையாவில் உள்ள சில  பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இரவு முழுவதும் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று அச்சத்தில் இருந்த நிலையில் மீண்டும் மின்சாரம் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது “வடமேற்கு லண்டனில் உள்ள நுகர்வோருக்கு இடையூறு ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இந்த மின் தடை ஏற்பட்டதற்கு காரணம் நிலத்தடி மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு தான். இதனை தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் திரும்பியது.மேலும் மற்ற பகுதிகளில் விரைவில் மின்சாரம் திரும்பி வரும். அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |