வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜயுடன் சரத்குமார், பிரபு, குஷ்பூ ஆகியோரின் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் படபிடிப்பு 100 வது நாளை எட்டி உள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜயுடன் எடுத்துக் கொண்ட செல்பி வலைதளத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் குஷ்பூவும் வாரிசுபடம் படப்பிடிப்பில் தன்னோடு நடித்த சரத்குமார், பிரபு ஆகியருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அத்துடன், இருவர்களுடன் இருந்தால் ஒருபோதும் சோகமான மனநிலை இருக்காது என்ற பதிவையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் வாரிசு படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிடவும், படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.