சீன கம்யூனஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீன அதிபராக மூன்றாவது முறை தேர்வாகி இருக்கும் ஜின்பிங்கிற்கு ரஷ்ய அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, நமது நாடுகளுக்கு இடையேயான முலோபாய ஒத்துழைப்பை வழிபடும் நோக்கத்தில் எங்கள் அதிகாரப்பூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான பொதுவான பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார். அதேபோல் வடகொரியா அதிபர் சீன அதிபருக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என கூறியுள்ளார்.