Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இருவரை காதலித்து…. அதில் ஒருவரை மணமுடித்து…. இன்னொருவரோடு பழகியதால்…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்….!!!

ஈரோடு மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் கார்த்திக் – பிருந்தா. பிருந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்ததால் இது குறித்து காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிருந்தா திருமணத்திற்கு முன்பாக இரண்டு பேரை காதலித்து வந்ததும் அதில் ஒருவரை ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் இன்னொருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிருந்தாவின் கணவர் கார்த்தி வெளியூர் சென்றுள்ளார். அப்போது காதலி அழைத்ததால் காதலன் அரவிந்த் பிருந்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தன்னை திருமணம் செய்யும்படி பிருந்தாவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிருந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அரவிந்த் சென்னைக்கு தப்பி சென்றுள்ளார். தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அரவிந்த் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |