Categories
ஆட்டோ மொபைல்

இரு அசத்தல் நிறங்களில்…. கே.டி.எம். 200 டியூக்….. இந்திய சந்தையில் விற்பனை….!!!!

இரு நிறங்களில் கிடைக்கும் கேடிஎம் 200 டியூக் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

கேடிஎம் 200 டியூக் மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கின்றது. இந்திய சந்தையில் கேடிஎம் 200 டியூக் மாடல் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய கேடிஎம் 200 டியூக் மாடல் வெள்ளை நிற பெயிண்டிங், பியூவல் டேன்க் மீது கருப்பு நிற ரேசிங் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பெயிண்டிங் உடன் வீல்களில் கே.டி.எம். நிறுவனத்தின் பாரம்பிரயம் மிக்க ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 200 டியூக் மோட்டார் சைக்கிள் மாடல் முழுமையாக ஆரஞ்சு மற்றும் பிளாக் நிற கிராஃபிக்ஸ் உடனும் பெற்றுக் கொள்ள முடியும்.  கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிளில் 199சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Categories

Tech |