Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்…. மோதியதில் ஒருவர் பலி…. ஏரல் பகுதியில் சோகம்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் மேல ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய நண்பர் நாராயணன் ஆகிய இருவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏரலில் இருந்து வந்துள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சக்திவேல் மற்றும் நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |