Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மத்திய ரிசர்வ் படை வீரர்களை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் கோட்டை தெருவில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்கள் வரும் வழியில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், விஸ்வநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் கூடினர்.

அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கணேசமூர்த்தி, செந்தில் உள்பட 6 பேர் விஸ்வநாதனின் மகன்களான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்க்கும் சந்தோஷ்குமார், அரவிந்தன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சந்தோஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில், கணேச மூர்த்தி உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |