இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்களூர் மேலப்பட்டியில் சேவியர்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கம்பி வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் உறவினரான வென்சஸ்லாஸ்(36) என்பவர் பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றால் தாக்கி கொண்டனர்.
இதனால் அந்தோணிசாமி ஜெயசீலன், சகாயராஜ், பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.