Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காயமடைந்த 7 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சங்கருக்கும், உறவினரான சண்முகம் என்பவருக்கும் நிலத்திற்கு போகும் வழி தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று சங்கர் தனது நிலத்தில் நெல் அறுவடை செய்து அதனை சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த சங்கர், சண்முகம் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |