தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரிதா என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதனால் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த முருகன், சரிதா, பூங்கொடி, ஜீவன், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.