ரஷ்யா ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரைன் நாட்டின் எல்லை அருகே நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து மேக்ரான் கூறுகையில், இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஏனென்றால் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும். அதன்படி புடினுடனான சந்திப்பு பதற்றத்தைத் தணிப்பதற்கான முதல் படி ஆகும்” என்று கூறியுள்ளார்.