Categories
உலக செய்திகள்

இரு பிரபல நாடுகள்…. “நதிநீர் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை”…!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கடந்த 1960ஆம் ஆண்டு சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் தொடர்பான தளர்வுகளை  ஒத்துழைக்கவும் பரிமாறி கொள்ளவும் சிந்து நிரந்தர ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு முறை இரு நாடுகளும் சந்தித்து நீரை பகிர்ந்து கொள்வது மற்றும் நீர்மின் நிலையங்களை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த ஆண்டுகளுக்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. இந்த நிலையில் பேச்சுவார்த்தையின் முதல் நாளில் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் நடப்பு ஆண்டுகளுக்கான வெள்ள பாதிப்பு தகவல்கள் குறித்து பேசியுள்ளனர். இதற்கிடையில் சிறிய அளவிலான நீர் மின் திட்டங்கள் குறித்து நேற்று பேசி வந்தனர். இந்த நிலையில் நாளை ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகளை குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |