தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் மணிரத்தினம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் பூபதி இயக்குகிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை ஏகே என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.