Categories
தேசிய செய்திகள்

இரு வெவ்வேறு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிர பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மக்கள் முன்பைவிட ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றினை தடுப்பதற்காக வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த ஒரு முடிவுக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |