கடந்த 2020 ஆம் வருடம் மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த மரியானா வரேலா வெற்றி பெற்றுள்ளார். இவரும் போட்டோ ரிகோ நாட்டின் அழகி பாபியோலா வேலன்டினும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். அதன் பின் தன் பாலின ஈர்ப்பாளராக இருவரும் ஒன்றாகவே வாழ தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலை ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020ன் போது இருவரும் முதல்முறையாக சந்தித்து இருக்கின்றனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தின் திருமண பதிவு அலுவலகத்திற்கு வெளியே இருவரும் வெள்ளை நிற உடை அணிந்து ஜோடியாக காணப்பட்டுள்ளனர்.