Categories
பல்சுவை

இரை தேடி குடியிருப்புக்குள்….. 10 அடி உயரம் தாண்டிய விலங்கு…. நெஞ்சை பதைபதைக்கும் காணொளி….!!

பூனையை பிடிக்க 10 அடி கேட்டை தாண்டி சிறுத்தையின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா விலங்குகளின் அசாதாரண காணொளிகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சிறுத்தை ஒன்று இரைதேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது.

அங்கு பூனையை பார்த்த சிறுத்தை அதனை பிடிப்பதற்காக 10 அடி உயரம் கொண்ட கேட்டை ஒரே பாய்ச்சலில் தாண்டி செல்கிறது. நெஞ்சை பதைபதைக்கும் இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தங்களின் தேவைக்காக காடுகளை அழிப்பதால் தான் இதுபோன்ற இக்கட்டான சூழல் உருவாகின்றது.

Categories

Tech |