மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததால் மாணவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மந்திரம் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை அவ்வழியாக சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மாணவியை கல்லூரியில் இறக்கி விடாமல் அந்த வாலிபர் வேகமாக சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.