Categories
தேசிய செய்திகள்

இறக்கும் நிலையில் கணவன்…. அவரோட “அது” எனக்கு வேணும்…. மனைவியின் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனாவால் இறக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே குழந்தை இல்லாத நிலையில் தனது கணவரிடமிருந்து குழந்தை பெற விரும்பிய அந்த பெண் அவருடைய விந்தணுவை சேகரித்து தரும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் அந்த பெண் தனது கணவரின் விந்தணுவை சேகரித்து தர வேண்டுமென்று குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியதன் காரணமாக செயற்கை முறையில் குழந்தை பெற கணவரின் விந்தணுவை சேகரித்து பெற அந்த பெண் வேண்டியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த பெண்ணின் ஆசையை நிறைவேற்ற  மருத்துவமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |