Categories
அரசியல் மாநில செய்திகள்

இறங்கி வர மறுத்த எடப்பாடி…! ”திரும்ப திரும்ப பேசுனோம்” உண்மையை போட்டுடைத்த தேமுதிக …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள்.

இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… முதலில் கூட்டணியில் இருக்கின்ற எல்லாரையும் ஒரே நேரத்தில் அழையுங்கள். ஒரே டேபிளில் உட்கார்ந்து யார் யாருக்கு எத்தனை சீட்டு ? எத்தனை தொகுதி ? என்பதை பைனல்  பண்ணுங்க என்றோம். அதற்குப் பிறகு யார் யார் என்பதை அவர்கள் பிரித்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்களுடைய கூற்றாக இருந்தது. ஆனால் அதை அவர்கள் செவிசாய்க்கவில்லை. அது தான் சொல்கிறேன் அண்ணன் எடப்பாடி அவர்கள் எங்கள் மேல் வந்து பக்குவம் இல்லை என்று சொல்கிறார்.

உண்மையிலேயே இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றக் கூடிய பக்குவம் இல்லாத ஒரு முதலமைச்சராக தான் அண்ணன் எடப்பாடி அவர்கள் அன்றைக்கு இருந்தார்.தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன், அக்பர் என்ற மூன்று பேருமே குழு அமைத்து நான்குமுறை பேச்சுவார்த்தைக்கு சென்றார். கடைசி வரைக்கும் எண்ணிக்கையும் இறுதி ஆகல. தொகுதியும் கடைசிவரை அவர்கள் சொல்லவில்லை. இறுதிகட்டமாக தான் சுதீஷ் போய் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார்.அப்பொழுதும் அவர்கள் 12 தொகுதி, 13 தொகுதி என்பதிலிருந்து 1 தொகுதி கூட மேலே ஏறி வரவே இல்லை.

இதற்கு கேப்டன் ஒத்துக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். 41இல்  ஆரம்பித்து அப்புறம் 25 என குறைந்து,  நாங்களும் கூட்டணி எப்படியாவது சுமூகமாக முடிய வேண்டும். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக முடியவேண்டும். மீண்டும் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்களும் பல முறை மிக மிக பொறுமையாக ,மிக மிக விட்டுக்கொடுத்து, அமைதி காத்து சிறப்பாகத்தான் எங்கள் கூட்டணியை நாங்கள் கொண்டு சென்றோம். கடைசியில் 18 தொகுதியும், ஒரு ராஜ்யசபா கொடுங்கள் என்று இறுதியாக கேப்டன் சொன்னதை சுதீஷ் அவர்கள் முதலமைச்சரிடம் சொன்னார்.

ஆனால் அவர் அந்த 13 நம்பரில் இருந்து ஒரு நம்பர் கூட நான் வந்து ஏறி வரவே முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அப்படி என்றால் கேப்டன் ஒத்துக்கொள்ள மாட்டார் அண்ணா என தெளிவாக சுதீஷ் பொறுமையாகவே முதல்வரிடம் சொன்னார். அப்போ அவர் என்ன சொன்னார் என்றால்… அதே 13 நம்பர் தான். அப்போ சுதீஷ் நீங்கள் 13 நம்பரிலே இருக்கீங்க நான் கேப்டனிடம் சொல்லி கன்வின்ஸ் பண்ணுகிறேன்.எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டி போடப் போகிறோம் அதையாவது எங்களுக்கு சொல்லுங்கள் என்று சுதீஷ் கேட்கிறார்.

அதுக்கும் முதலில் நீங்கள் கையெழுத்து போடுங்கள்,  அதற்குப்பிறகுதான் எந்த தொகுதி என்று நாங்கள் செல்வோம் என்று சொன்னார். இது தான் எம்பி எலெக்ஷனிலும் நடந்தது. இதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த எந்த நிர்வாகிகளும்,  தொண்டர்கள் அதற்கு உடன்படவில்லை.தொகுதி எண்ணைக்கையிலும் திருப்தி இல்லை, என்ன தொகுதி என்றும் தெரியாத ஒரு காலகட்டத்தில், காலமே இல்லாமல் ரொம்ப ஷார்ட் டைம் போயிட்டே இருந்ததால் இறுதியாக சுதீஸ் அவர்கள் முதலமைச்சரிடம் பேசும்போது, இவ்வளவுதான் தம்பி… 13 தான், அதுக்கப்புறம் உங்களுக்கு என்ன முடியுமோ…நீங்கள் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

அப்புறம் கூட்டணியை  விட்டு வெளியே வர வேண்டியது இருக்கும் அண்ணா என்பதையும் தெளிவாக சுதீஷ் சொன்னார், அது உங்கள் பிரியம், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரொம்ப அசால்ட்டா  பதில் சொன்னார். அதற்குப் பிறகு அந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது எங்களை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய ஒரு கடினமாக இருந்தது. அதற்கு பிறகு தான் கேப்டன் எல்லாம் மாவட்ட செயலாளர்களையும் அழைக்கச் சொன்னார். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இங்கு நடந்தது.

அன்றைக்கு மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் அத்தனை பேருடைய கருத்தும் 13 தொகுதிக்கு நாங்கள் யாரும் ஒத்துக் கொள்ளவே மாட்டோம் என்று ஒட்டுமொத்த மாவட்ட செயலாளர்கள் ஒரே மாதிரியாக சொன்னார்கள் .அப்புறம் நாங்கள் டைம் கொடுத்தோம். அதற்கு அப்புறம் கூட சுதீஷ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தனை மாவட்ட செயலாளர்களும் 13 தொகுதிக்கு ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனவே எங்களுக்கு இப்பயாவது நீங்கள் சொல்லுங்கள் என்று கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றோம் என அறிவிப்புக்கு முன்னாடி கூட முதலமைச்சருடைய  பி.எ வை, முதல்வர் கூட இருப்பவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.

அப்பவும் அவர்கள் அதே எண்னிக்கை 13 என்பதில் உறுதியாக இருந்தார். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது அவர்கள் சொல்லிவிட்டார்கள். எனவே மாவட்ட செயலாளர்கள் அத்தனை பேரும் 13 எண்ணிக்கைக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று எல்லோரும் ஏகோபித்த ஒரே கருத்தாக இருந்ததனால், கேப்டன் அவர்கள் அன்றைக்கு இந்த கூட்டணியை விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறுகிறோம் என்று சொன்னார். உடனே எல்லோரும் போய் வெளியே பட்டாசு வடித்தார்கள், ஏதோ நடந்தது .இதுதான் உண்மையில் நடந்த ஒரு விஷயம் .

Categories

Tech |