Categories
தேசிய செய்திகள்

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர்…. 7 மணி நேரத்திற்கு பின்பு உயிர் பிழைத்த சம்பவம்…. ஐந்து நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழப்பு….

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் வந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மொராதாபாத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஸ்ரீகேஷ் குமார் என்பவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இதில் ஸ்ரீகேஷ் குமார் டெல்லியில் உள்ள லா லா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக கருதிய மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அவரை பினவறைக்கு கொண்டு சென்று சுமார் 7 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் அவரை பிணவறையில் வைத்திருந்தனர். பின்பு அவரது உடலை அடையாளம் காட்டுவதற்காக அவருடைய மைத்துனர் பிணவறைக்கு சென்று பார்த்தபோது ஸ்ரீகேஷ் குமாரின் உடலில் அசைவு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் கூறிய பின்பு அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீகேஸ் குமார் இறந்தார். ஸ்ரீகேஷ் குமாரின் மரணம் குறித்து அவரது சகோதரர் சத்தியானந்த் கவுதம் கூறுகையில், என்னுடைய சகோதரர் வாழ வேண்டும் என்ற விருப்பத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருந்ததால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் எனக் கூறினார். மேலும் தனது சகோதரனின் இறப்பிற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.

சம்பவம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில் அதிகாலை 3 மணிக்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது ஸ்ரீகேஷ் குமாருக்கு இதய துடிப்பு இல்லை என கூறினார். ஆனால் இதற்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் அல்ல இது ஒரு அரிதான சம்பவமாக கருதப்படுகிறது என கூறினார்.

Categories

Tech |