கர்நாடகா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட ஒரு நபர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மஹலிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சங்கர் கோபி என்ற நபர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முற்பட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது கை கால்களில் புல்லரிப்பு மற்றும் அசைவுகள் இருந்ததை கவனித்தனர். மேலும் அவருக்கு இதயத்துடிப்பு இருந்ததையும் மருத்துவர்கள் கவனித்தனர். இதைத்தொடர்ந்து வென்டிலேட்டரிலிருந்து அகற்றிவிட்டு சிறிது நேரம் காத்திருந்தனர். அவர் கை கால்களை அசைத்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அழைத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இது குறித்து பேசிய மருத்துவர் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.