Categories
தேசிய செய்திகள்

இறந்தபோன கணவன் பாம்பாக மாறி வந்துட்டார்…. வீட்டிற்குள் பாம்புடன் வாழும் பெண்….!!!!

கர்நாடக மாநிலத்தில் வீட்டிற்குள் நல்ல பாம்பு உடன் மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக வாழ்ந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் மானசா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. ஆனால் மானசா இறந்துபோன தனது கணவர் தான் மறுபிறவி எடுத்து நல்ல பாம்பாக வீட்டிற்குள் தன்னைத் தேடி வந்து இருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் தனது கணவர் பாம்பு உருவில் வந்து உள்ளார் என கூறி பாம்பை பிடிக்க கூடாது என்றே வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என்றும் கூறி அவர்களோடு தகராறு செய்துவிட்டு நான்கு நாட்களாக மானசா பாம்புடன் வாழ்ந்து வருகின்றார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |