Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்தவரின் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம்”…. சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை….!!!!!

இறந்தவரின் உடலை தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் மக்கள் மயான கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றார்கள்.

மேலும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல தனியாருக்கு சொந்தமான வயலில் கொண்டு செல்கின்றார்கள். இந்நிலையில் நேற்று முதியவர் ஒருவர் இறந்துவிட அவரின் உடலை தனியாருக்கு சொந்தமான விவசாய வயல் வழியாக எடுத்துச் சென்றார்கள். இதனால் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |