Categories
மாநில செய்திகள்

இறந்தவர் உடலை ஒப்படைக்க…. ஜி-பே அட்வான்ஸாக ரூ.10,000…. பெரும் கொடுமை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றால் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் நோயாளி உடலை ஒப்படைக்க ரூ.19,000 வரை லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் சாந்தி என்பவரின் உடலை ஒப்படைக்க மறுத்து ஜி-பே அட்வான்ஸாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

Categories

Tech |