Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் …!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை இடுகாட்டிற்க்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லதுரையின் உறவினர்கள் பட்டுக்கோட்டை பேராவூரணி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை விலைநிலம் வழியாக தூக்கிச் சென்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளன. உடனடி யாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |