Categories
தேசிய செய்திகள்

இறந்துபோனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் ஈரோடு மாவட்டத்தில் கூலி தொழிலாளி மூர்த்தி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று மூர்த்தி பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன்கள் கார்த்தி மற்றும் பிரபு குமார்  பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 55 வயது கொண்ட ஆண் சடலம் கிடப்பதாக வாட்ஸப்பில் தகவல் கிடைத்தது. இதையடுத்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்தபோது முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையைப் போன்ற தோற்றத்தால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என்று முடிவு செய்துள்ளனர்.

உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையில் அன்பாலயம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். இந்த நிலையில் இறந்துபோனதாக பெரிய அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

உடனே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்துபோனதாக கூறிய அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் அந்த பகுதியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலத்தைபோலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |