Categories
தேசிய செய்திகள்

இறந்துபோன இந்துமத ஊழியர்…. பின் இஸ்லாமிய குடும்பத்தினரின் நெகிழ்ச்சி செயல்…..!!!!

பீகாரில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் தன் கடையில் பணிபுரிந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்துவைத்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வைரலாகியது. இந்த நிலையில் முகம்மது ரிஸ்வான் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது “நாங்கள் பீகாரில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறோம். எங்களது கடைக்கு சென்ற 20 வருடங்களுக்கு முன் ராம்தேவ் ஷா(50) என்பவர் வேலைக்கு வந்தார்.

அப்போது ராம்தேவ் ஷா தன்னால் கடின வேலைகளை செய்ய முடியாவிட்டாலும், கணக்கு வழக்குகளை பார்க்க முடியும் என கூறி பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் வயது அதிகமானதால் அவரால் முன்புபோல் பணிபுரிய முடியவில்லை. இதனையடுத்து நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், சம்பளத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் மாதம் மாதம் சரியாக கொடுத்து விடுகிறேன் என உறுதியளித்தேன். பின் எங்களுக்கு ஒரு பாதுகாவலர் போல் அவர் இருந்தார். இந்நிலையில் துரதிருஷ்ட வசமாக அவர் இறந்துவிட, அவருக்கு நாங்களே இறுதிச்சடங்கு நடத்தினோம்.

இந்துமத சடங்குகளை போன்றே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. எங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவருக்கு இறுதிச் சடங்கை நடத்தினேன்” என்று கூறினார். அதனை தொடர்ந்து ரிஸ்வானிடம் இப்போது நாட்டில் எழுந்துள்ள மதபதற்றம் மற்றும் வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, “மனிதனின் உண்மையான பண்புகள் இது இல்லை. தொலைக்காட்சியில் காட்டுவது உண்மையை பிரதிபலிப்பதாகயில்லை. ஒரு குழந்தை கீழேவிழுந்து காயம் ஏற்பட்டால் உடனே முதலுதவி சிகிச்சையையே செய்வோமே தவிரத்து யாரும் ஜாதி, மதம் பற்றி கேள்வி எழுப்புவது கிடையாது. எங்களது மத நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள். அதுபோன்று இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கிறோம்” என்று கூறினார்.

Categories

Tech |