Categories
மாநில செய்திகள்

இறந்தும் வாழ்ந்த மண்ணுக்கு உதவும் விவசாயி…. நெஞ்சை உருகவைக்கும் உயில்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைலாசம்பாளையம் காவடிகாரன்காடு பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இன்று இயற்கை மரணம் அடைந்தார். இதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அவரது பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில், “கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் எனது முழு விருப்பத்தின் பேரில் எவருடைய தூண்டுதலுக்கும், கட்டாயப்படுத்திற்கும் உட்படாமல் இந்த உறுதி விருப்பம் ஆவணத்தை வெளிப்படுத்துகிறேன். எனது உயிர் ஒடுக்கம் பெற்ற உடனே இந்த ஆவணம் நடைமுறைக்கு வரும்.

அதனை தொடர்ந்து நான் விவசாய பணி செய்வதோடு சமுதாய பணிகளையும் பங்கு கொண்டு நிறைவாக வாழ்ந்து வருகிறேன். மருத்துவ ஆலோசனைகளை பெற்று உடல் நலத்துடன் இருப்பதால் மருத்துவத்துறைக்கு எந்த வகையிலும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே எனது உயிர் பிரிந்ததும் உடல் மற்றும் கண்களை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதன் இவ்வுடல் மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தத் தக்கதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி விவசாயி உடலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. மேலும் இழந்த விவசாயின் உடல் தானமாக வழங்கப்பட்டது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |