அரசு ஆவணங்களில் எப்படியாவது தவறு வந்து விடுகின்றது. தனிப்பட்ட தகவல்களில் அடிப்படை தவறுகள் ஏற்படுகின்றது. சிறு பிழை ஏற்படுவது சகஜம். ஆனால் சில சமயங்களில் உயிருள்ள ஒருவர் இறந்துவிட்டதை போல பெரும் தவறுகள் ஏற்பட்டால் என்ன செய்வது, அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது . ஹரியானா மாநிலம் ரோத்தக்கிலில் இதேபோன்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது. அரசுப் பதிவேடுகளில் இறந்ததாகப் பட்டியலிடப்பட்ட 102 வயது முதியவர், தான் உயிருடன் இருப்பதாக அறிவிக்கச் செய்த காரியத்திற்காக தலைப்புச் செய்தியாகியுள்ளார். அவரது 102 வயது பெயர் துலி சந்த்.
பல மாதங்களாக ஓய்வூதியம் வராததால் விசாரித்தபோது அரசு பதிவேடுகளில் இறந்துவிட்டதாக துலி சந்த்துக்கு தெரிய வந்தது. இதனால், அவரது வாழ்க்கை பரிதாபமாக மாறியது. அப்போது தான் உயிருடன் இருப்பதாக அறிவித்த துலி சந்த், தேரில் ஏறி ஊர் முழுவதும் உலா வந்து அரசு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தினார். ‘உன் மாமா உயிருடன் இருக்கிறார்’ என்ற வாசகம் கொண்ட அட்டையை ஏந்தி அவர் வாகனத்தில் வலம் வந்தார். அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் இணைந்தனர். அவருக்கு நோட்டுமாலை, பாட்டு, மேளா, நடனம் என விழாக்கோலம் பூண்டது. துலி சந்த் தனது பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை உள்ளூர் மக்களிடம் காட்டினார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.