உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
கொலம்பியாவை சேர்ந்த ஜோஸ் என்பவர் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அனுமதித்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு அவரது உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோஸ் உயிரிழந்ததை ஏற்காத குடும்பத்தினர் அவரைப் பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதோடு ஜோஸை வைத்திருக்கும் பிணவறைக்கு செல்ல வேண்டுமென்றும் அடம் பிடித்தனர். மருத்துவர்கள் அதற்கு அனுமதி அளிக்காத போதும் ஜோஸின் மகள் பின அறைக்குள் சென்று தந்தையை பார்த்துள்ளார்.
அப்போது ஜோஸ் மூச்சு விடுவதையும், அவர் உயிருடன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து விரைந்து வந்து மருத்துவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் அதனை நம்ப மறுத்து உயிரிழந்த பிறகு நோயாளிகளுக்கு இருக்கும் இயற்கையான எதிர்வினைகள் தான் அது என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோஸின் மகன் மற்றும் மகள் சேர்ந்து தந்தையை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. அதோடு உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.