சாலையோரம் உயிரிழந்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள அரசரடி வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை சாலையில் காட்டெருமை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மேகமலை வனசரகர் சதீஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறையினர் காட்டெருமையை பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சென்ற கால்நடை மருத்துவர் உயிரிழந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு அல்லது நோய் ஏதேனும் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் வனப்பகுதியில் காட்டெருமையின் உடலை வனத்துறையினர் புதைத்துள்ளனர்.