மயில்களை கொன்ற குற்றத்திற்காக விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாளையத்தில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் 9 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த 9 மயில்களையும் கைப்பற்றி சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் அசோகன் மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த குருசாமி என்பவர் பயிர்களை நாசப்படுத்தும் கோழிகளை கொல்வதற்காக சோள விதையில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். அதனை தின்றதால் மயில்கள் அனைத்தும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் குருசாமியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.