மருத்துவமனை எதிரில் இரண்டு முதியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 2 முதியவர்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு முதியவர் குரும்பலூர் பகுதியில் வசித்து வந்த சந்திரசேகர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.