அன்னப்பறவை ஒன்று தன் ஜோடிக்காக ரயில் பாதையில் காத்திருந்தால் ரயில்கள் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள Fuldatal என்ற பகுதியின் ரயில் பாதையில் உள்ள மின் கம்பியின் உயர் அழுத்தத்தால் அன்னப்பறவை ஒன்று அதில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனைக்கண்ட அன்னப்பறவையின் ஜோடியான மற்றொரு அன்னப்பறவை உயிரிழந்த தன் ஜோடிக்கு துக்கம் அனுசரிப்பது போன்று ரயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
அதனால் சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அந்த இடத்திற்கு சென்று அதற்குரிய கருவிகளின் உதவியால் மின்கம்பத்தில் சிக்கி இறந்த அன்னப்பறவையை அங்கிருந்து நீக்கியுள்ளனர். மேலும் அதற்காக காத்துக்கொண்டிருந்த அதன் ஜோடி அன்னப்பறவையையும் பாதுகாப்பாக மீட்டு ஒரு நதி கரையில் கொண்டு விட்டுள்ளனர். இச்சம்பவத்தால் சுமார் 23 ரயில்கள் செல்வதற்கு 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.