Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இறந்த ஆட்டை வாங்கியதால் தகராறு… கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பி… திருச்சியில் பரபரப்பு…!!

இறந்த ஆட்டை விலைக்கு வாங்கிய தகராறில் அண்ணன் தம்பியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அமராவதி சாலை கிராமத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரின் இளையமகன் லாரி டிரைவரான ரவிக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமப்பட்டி பகுதியில் குடும்பத்தை விட்டு தனித்து வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது தந்தை செல்லப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்கு ரவிக்குமார் தனது மணைவியோடு அமராவதி சாலை கிராமத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு சொந்தமான ஆடு இறந்துவிட்டது.

இந்நிலையில் அந்த ஆட்டை செல்லப்பாவின் இரண்டாவது மகன் சிவகுமார் பேரம் பேசி வாங்கி வந்துள்ளார். அப்போது ரவிக்குமார் இறந்து போன ஆட்டை ஏன் வாங்கி வந்தாய் என கேட்டு திட்டியுள்ளார். மேலும் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த சிவகுமார் வீட்டில் வைத்து இருந்த கத்தியை எடுத்து தனது தம்பி என்று பாராமல் ரவிக்குமாரை சரமாரியாக குத்தினார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அவர்களின் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. ஆனால்  மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |