Categories
தேசிய செய்திகள்

இறந்த கணவரின் இராணுவ பணியை…. மன உறுதியோடு தொடரும் மனைவி…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!

மனைவி ஒருவர் இறந்த தனது கணவரின் இராணுவ பணியை தான் செய்ய முன்வந்துள்ளதால் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கௌஸ்தூப் ரானே. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி கனிகா. இந்நிலையில் கடந்த 2018 ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போது 3 வீரர்கள் பலியாகினர். அதில் இவரும் ஒருவராவார். இதையடுத்து இவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட போது அதனை, அவருடைய மனைவி பெற்றுள்ளார். கனிகா பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய கணவரின் மறைவுக்குப் பிறகு அவர் கணவர் பணியாற்றிய ராணுவத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று லட்சியமாக கொண்ட, அவர் தனியார் துறை பணியை ராஜினாமா செய்துள்ளார். பின்னர் அரசு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து தற்போது அவரும் ராணுவத்தில் இணைய தயாராக உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய இந்த முடிவு எளிதானதாக இல்லை. என்னுடைய கணவர் நான் என் கனவுகளை தொடர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தார். அனால் இப்போது அவருடைய கனவை நான் பின் தொடர்கிறேன். இதேநிலை என் எனக்கு வந்திருந்தாலும் அவரும் இதைத்தான் செய்திருப்பார். பயிற்சிக்கு வருவதற்கு முன்பாக 400 மீட்டர் கூட ஓட முடியாது. இப்போது 40 கிலோமீட்டர் கூட என்னால் ஓட முடியும். முயற்சியும், மனதிடமமும் இருந்தால் எல்லாமே சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து கனிகாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |