கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள Swindon-ல் வசித்து வரும் ஆஷா (வயது 43) என்பவரின் கணவர் திடீரென்று மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஏற்கனவே இதயம், கல்லீரல் பிரச்சனை மற்றும் நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதியரின் மகள் சாஃப்ரான் (வயது 22) தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் ஆவிகளுடன் பேசக் கூடிய கெரின் (வயது 60) என்பவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு சாஃப்ரானுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் தன்னுடைய தாய் ஆஷாவிடம் கெரினை சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து ஆஷாவும் கெரினை சந்தித்துள்ளார். அப்போது கெரினும், ஆஷாவும் இருவருக்கும் இடையே ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல உணர்ந்துள்ளனர். அதன்பிறகு கெரின், ஆஷா, சாஃப்ரான் மூவரும் சேர்ந்து ஆவிகளுடன் பேசக் கூடிய நபர் ஒருவரிடம் சென்றுள்ளனர். அவர், அண்மையில் இறந்த நீரிழிவு மற்றும் இதய பிரச்சனை கொண்ட நபர் ஒருவரை தான் காண்பதாகவும், தன்னிடம் அவர் தான் நன்றாக இருப்பதை தனது குடும்பத்தினரிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஆஷாவும் அது தன்னுடைய கணவர் ஜான் தான் என்று நம்பியுள்ளார். மேலும் கெரினையும் தன்னையும் சந்திக்க வைத்தது தனது கணவர் ஜான் தான் என்றும், இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று ஜான் விரும்புவதாக ஆஷா நம்பியுள்ளார். இதையடுத்து ஒரு நாள் கெரின் ஆஷாவிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா ?என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் 2019-ஆம் ஆண்டில் ஜானுடைய ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.