ராணியாரின் இறுதி சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பிரித்தானியாவில் குவிந்திருக்கின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக மாறி இருக்கிறது. மகாராணி எலிசபத்தின் மரணம் பிரித்தானியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பலரும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரத்தானியாவிற்கு வருகின்றனர். அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் இந்தியர்கள் பிரித்தானியாவிற்கு வருகை தருகின்றனர்.
ராணியின் இறுதி சடங்கு நாளை நடக்க இருக்கின்ற நிலையில் பார்வையாளர்களின் வருகை பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டு வருகின்றது. ஏனென்றால் பிரித்தானியா பணவிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூழலில் இருந்தும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை ராணியார் உயர்த்தும் சூழல் அமைந்திருக்கின்றது. பார்வையாளர்கள் அதிகம் வருவதனால் மத்திய லண்டனில் உள்ள ஹோட்டல் அறைகளுக்கான தேவைகள் அதிகரித்து இருக்கிறது. மேலும் சில சந்தர்ப்பங்களில் அங்கு வந்து தங்குவதற்கான விலை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.