Categories
பல்சுவை

இறந்த பிறகும் 2 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த தாய்…. கண்கலங்க வைத்த சம்பவம்…. வெளியான சில தகவல்கள்…!!

நமது தாய் போல் நம்மை வேறு யாரும் பார்த்து கொள்ள முடியாது. இறந்த பிறகும் ஒரு தாய் தனது 2 குழந்தைகளை பாதுகாப்பு உலகத்திற்கு கொடுத்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா…?? சவுத் பிரேசிலை சேர்ந்த Silva padilha என்பவர் மூளை ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான Silva padilha வலிப்பு ஏற்பட்டதால் திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்து விட்டார் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அவரது வயிற்றில் வளர்ந்த இரண்டு குழந்தைகள் ஆக்டிவ்வாக இருந்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதனால் அந்த இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக இந்த உலகிற்கு கொண்டு வர மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதற்காக 123 நாள் Silva padilha- வை வென்டிலேட்டரில் வைத்துள்ளனர். அந்த அறை முழுவதையும் மருத்துவர்கள் அழகாக அலங்கரித்து, பிறக்காத குழந்தைகளுக்கு பாட்டு பாடி, இசையமைத்து அதனை உற்சாகமாக வைத்துள்ளனர். சுமார் 123 நாட்கள் கழித்து இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக பிறந்தது.

Categories

Tech |