மதுரையில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் என்ற தெருவில் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி தம்பதியினர் இரண்டு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரின் உடலை கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு மகன்கள் வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக உடலை எடுக்காததால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்ட நிலையில் தற்கொலை செய்து கொள்வேன் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து இறந்த மாலதியின் உடலை எடுத்து திருநெல்வேலிக்கு இறுதிச்சடங்கு செய்ய கொண்டு சென்றனர். உயிரிழந்த மனைவியின் உடலுடன் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் வீட்டிலிருந்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.