Categories
உலக செய்திகள்

இறந்த மனைவியை மீண்டும் சந்தித்த கணவர்… அசரவைக்கும் காட்சிகள்…!!!

தென் கொரியா நாட்டில் இறந்து போன தனது மனைவியை கணவர் மீண்டும் சந்தித்து பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களை விட்டு பிரியும் போது மிகுந்த வருத்தம் ஏற்படும். உயிருடன் இருக்கும் போது சிலருக்கு அவர்களின் அருமை தெரியாது. அவர்கள் இறந்த பிறகு மீண்டும் பார்த்து விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது சகஜம்தான். ஆனால் அது சாத்தியமல்ல. இந்நிலையில் தென் கொரியா நாட்டில் இறந்துபோன மனைவியை கணவர் மீண்டும் சந்தித்த காட்சிகள் வெளியாகியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியவைச் சேர்ந்தவர் கிம் ஜாங் சூ. இவர் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்துபோன தனது மனைவியை சந்தித்துள்ளார். அந்நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தொடர்ந்து விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்துபோனவர்களின் உருவங்களை உருவாக்கி அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் சந்திக்கவைத்து வருகின்றனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் தற்போது கிம் நோயினால் இறந்துபோன தனது மனைவியை சந்தித்துள்ளார். இதில் அவரது மனைவியின் உருவத்தை உருவாக்கி, டப்பிங் ஆர்டிஸ்ட் உதவியுடன் குரலும் கொடுக்கவைத்துள்ளனர். விர்ச்சுவல் ரியாலிட்டியில் தனது மனைவியின் குரலைக் கேட்டதும் அவர் அழத்தொடங்கியுள்ளார். பின்னர் தனது மனைவியுடன் நடனமாடியும் மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |