அயர்லாந்தில் உள்ள கார்லோ என்ற நகரில் இரண்டு இளைஞர்கள் இறந்து போன முதியவர் ஒருவரின் உடலை உயிருடன் இருப்பது போல முட்டுக்கொடுத்து தபால் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். அதாவது Peader Doyle ( வயது 66 ) என்ற அந்த முதியவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் இந்த மோசமான செயலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் முதியவரின் உடலை தபால் நிலையத்திற்கு இழுத்து சென்ற போது அங்குள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஊழியர்கள் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரும் மாட்டிக் கொள்வோமோ ? என்ற பயத்தில் முதியவரின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் அந்த முதியவர் கொலை செய்யப்பட்டாரா ? எப்படி உயிரிழந்தார் ? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் அந்த நபர்கள் இருவருக்கும் சுமார் 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதில் ஒரு இளைஞர் ஸ்டேபிள்ஸ்டவுன் சாலையில் உள்ள Hosey’s என்ற கடைக்குச் சென்று மற்றொருவருடைய வாராந்திர ஓய்வூதியத்தை தன்னால் பெற முடியுமா ?என்று கேட்டுள்ளார். இதையடுத்தே இரு இளைஞர்களும் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.