அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம்’ நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ் ‘என்று கெஞ்சிய காட்சிகள் வெளியாகியுள்ளது .
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் போலீசுக்கும்,இனவாதத்திற்கும் இடையில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மிநீயாபொலிஸ் நீதிமன்றத்தில் அவர் கொல்லப்பட்டதற்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமஸ் லேன் ஜே, அலெக்சாண்டர் குயெங் மற்றும் டோ தோ ஆகியோர் தான் ஜார்ஜை கைது செய்த அதிகாரிகள். அவர்களின் உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகிய சில காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த வீடியோ காட்சியில் ‘என்னை சுட்டு விடாதீர்கள், நான் அம்மாவை இழந்து விட்டேன் நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்.’ என்று அவர் கதறியுள்ளார். இருப்பினும் அவரை கைது செய்த போது அவர் ‘நான் கெட்டவன் அல்ல ப்ளீஸ்’ என்று கெஞ்சியுள்ளார்.அந்த வீடியோ காட்சிகள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது .