Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கண்ணனின் உறவினர்கள் இவரது உயிர் இழப்பில் மர்மம் உள்ளதாக கூறி போலீசில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கண்ணனின் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் கண்ணன்  குடிபோதையில் உயிரிழக்கவில்லை என்றும், அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்தது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் கண்ணன் இறந்து கிடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று கண்ணன் குடிபோதையில் பாரிமுனை பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரின் தம்பியிடம் கண்ணன் பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். அவர் கண்ணனுக்கு பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆனாலும் கண்ணன் அவரை விடாமல் பணம் தரும்படி தகராறு செய்துள்ளார் . இதனால் கோபம் அடைந்த அப்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை அடித்துக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதன் பின் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |