கோவை மாவட்டத்தில் கணவன் இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த நிலையில் ராமமூர்த்தி தன் சோகத்தை மறப்பதற்காக அருகிலுள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தீப்பொறி கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு கண் மங்கலாக தெரிய ஆரம்பித்தது.
மேலும் ராமமூர்த்தியின் உடல்நிலை பாதித்திருந்த நிலையில் சரோஜினி அவரை நன்றாக கவனித்துக் வந்துகொண்டிருந்தார். அவருக்கு வேண்டிய அனைத்தையும் சரியாக செய்து கொண்டிருந்தார் .அப்பொழுது திடீரென இன்று காலை ராமமூர்த்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது உடனே மருத்துவரை அழைத்து சிகிச்சை பார்த்தபோது ராமமூர்த்தி இறந்துவிட்டதாக கூறினார் இதனைக்கேட்ட சரோஜினி பித்துப் பிடித்ததுபோல் அங்குமிங்கும் ஓடித் திரிந்து திடீரென மயக்கம் அடைந்தார்.
அதன்பிறகு அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவரை அழைத்து சிகிச்சை பார்த்தபோது சரோஜினியும் இறந்துவிட்டதாக கூறினார் இது சரோஜினி மற்றும் ராமமூர்த்தியின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தம்பதிகள் இறப்பிலும் இருவரும் இணைபிரியாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் பல போராட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்காக போராடி உள்ளனர்.
அப்போது போராட்டகளத்தில் சந்திக்கும் பொழுது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது திருமணமாகி 40 ஆண்டுகளாகியும் அவர்களின் காதல் துளியும் குறையாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதில் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் 40 வருட தாம்பத்தியத்தை மரணம் கூட பிரிக்க முடியவில்லை என்பதுதான்.