Categories
சினிமா தமிழ் சினிமா

“இறப்புக்கு முன் கடைசியாக நடித்த 5 பிரபலங்கள்”…. வெளி வந்த சில நாட்களிலேயே உயிரிழந்த பரிதாபம்…!!!

தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்னும் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த, நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள் இழப்புகள் நம்மை துயரில் ஆழ்த்தி இருக்கும். அப்படி இறப்புக்கு முன் அந்த பிரபலங்கள் நடித்தபடங்கள் எது என்பதைப் பற்றிக் காண்போம்.

ஸ்ரீவித்யா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடிப்பவர். பிரசாந்த் நடிப்பில் வெளியான லண்டன் திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளார்.

ரகுவரன் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர கதாநாயகர்களில் நடித்தவர். இவர் கடைசியாக தனுஷுக்கு தந்தையாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருக்கிறார். உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த 2008ல் காலமானார்.

தமிழ் சினிமா உலகில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜாதா. இவர் பல மொழி படங்களில் நடித்துள்ளார் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் இவர் கடைசியாக அஜித்தின் வரலாறு படத்திற்கு அம்மாவாக நடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகராக கால் தடம்  பதித்தவர் மணிவண்ணன். இவர் கிட்டத்தட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம். எல். ஏ. படத்தை நடித்து இயக்கி இருந்தார். இப்படம் வெளியான சில நாட்களிலேயே மணிவண்ணன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் கடைசியாக 2011-ல் வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு உடல் நலக்குறைவால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த வினுசக்கரவர்த்தி 2017இல் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |